பிரியங்கா சோப்ராவின் காலணிக்கு தனி அறை

விஜய் ஜோடியாக தமிழன் படத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமான பிரியங்கா சோப்ரா இந்தியில் முன்னணி நடிகையாக உயர்ந்து ஹாலிவுட் பாப் பாடகர் நிக் ஜோனசை திருமணம் செய்து அமெரிக்காவில் குடியேறி உள்ளார்.

தனக்குள்ள காலணி (ஷூ) மீதான ஆர்வத்தை பிரியங்கா சோப்ரா பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், “எனக்கு விதவிதமான ஷூ அணிவது பிடிக்கும். எந்த நாட்டிற்கு சென்றாலும் புதிது புதிதாக ஷூ வாங்க கடைகளை தேடிச் செல்வேன். இத்தனை ஷூ வாங்கி நீ என்ன பண்ண போகிறாய் என்று எத்தனையோ பேர் என்னை கேட்டு இருக்கிறார்கள். இப்போது பல நூறு ஜோடிகள் என்னிடம் உள்ளன.

மிகவும் விலை உயர்ந்த வெளிநாட்டு பிராண்டுகள் வரிசை வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. ஒரு கண்காட்சி மாதிரி தெரியும். நானே பிரத்யேகமாக ஆர்டர் செய்து ஷூக்களை தயாரித்துக்கொண்ட சந்தர்ப்பங்களும் உள்ளன. பெண்களில் உடை பைத்தியம், நகை பைத்தியம் என்று இருப்பார்கள். நீ ஒரு சரியான ஷூ பைத்தியம் என எனது சினேகிதிகள் என்னை கிண்டல் அடித்தால் கூட எனக்கு அந்த பைத்தியம் இன்னும் விடவில்லை. வீட்டில் ஷூக்களை வைக்க தனி அறைகள் உள்ளன” என்றார்.

Related posts