வடிவேல் நடிகர் ஆனது எப்படி? ராஜ்கிரண் விளக்கம்

நகைச்சுவை நடிகர் வடிவேலுவை சினிமாவில் அறிமுகம் செய்தவர் ராஜ்கிரண் என்பது எல்லோருக்கும் தெரிந்த தகவல். அவரை நடிகராக்கியது எப்படி? என்பது பற்றி ராஜ்கிரண் விளக்கமாக கூறினார்.

‘‘நான் தயாரிப்பாளராக இருந்தபோதே எனக்கு ரசிகர் மன்றம் இருந்தது. அந்த மன்றத்தை சேர்ந்த ஒருவர் என் மீது வெறித்தனமான அன்பு கொண்டவர். அவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. திருமணத்துக்கு வந்து நான் தாலி எடுத்துக்கொடுத்தால்தான் திருமணம் செய்து கொள்வேன் என்று அந்த ரசிகர் கூறியதால், மதுரையில் நடந்த திருமணத்துக்கு சென்றேன்.

திருமணம் முடிந்த பின் அந்த ரசிகர் எனக்கு பொழுது போகவேண்டும் என்பதற்காக ஒருவரை அனுப்பி வைத்தார். அந்த ஒருவர்தான் வடிவேல். பல்வேறு விதங்களில் பேசி, என்னை சிரிக்க வைத்தார். ‘என் ராசாவின் மனசிலே’ படப்பிடிப்பின்போது, ஒரு காட்சியில், சொந்த வசனம் பேசினார். அது எனக்கு பிடித்து இருந்தது. அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை அதிகப்படுத்தி, அவருக்கு ஒரு பாடலையும் கொடுத்து நடிக்க வைத்தேன்’’ என்று ராஜ்கிரண் கூறினார்.

Related posts