விதியின் கொடூரமான முடிவு மோடி

விதியின் கொடூரமான முடிவு இது என்று புனித் ராஜ்குமார் மறைவு தொடர்பாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
கன்னடத் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான புனித் ராஜ்குமார் இன்று (அக்டோபர் 29) காலமானார். உடற்பயிற்சியின்போது ஏற்பட்ட மாரடைப்பால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்குச் சிகிச்சைப் பலனின்றி அவருடைய உயிர் பிரிந்தது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
“விதியின் கொடூரமான முடிவு, திறமையான நடிகர் புனித் ராஜ்குமாரை நம்மிடமிருந்து பிரித்துச் சென்றுவிட்டது. இது இறப்பதற்கான வயதே அல்ல. அவரது பணியை, அற்புதமான ஆளுமை வரும் தலைமுறைகள் அன்போடு நினைவுகூர்வார்கள். அவரது குடும்பத்துக்கும் ரசிகர்களுக்கும் அனுதாபங்கள். ஓம் சாந்தி”.
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
——

Related posts