நாகசைதன்யா படங்களை நீக்கிய நடிகை சமந்தா

இன்ஸ்டாகிராமில் இருந்து நாகசைதன்யாவுடன் எடுத்த விதவிதமான புகைப்படங்கள் அனைத்தையும் நீக்கி உள்ளார் நடிகை சமந்தா.

கணவர் நாகசைதன்யாவை விவாகரத்து செய்வதாக நடிகை சமந்தா சமீபத்தில் அறிவித்தார். இவர்கள் பிரிவுக்கு சமூக வலைத்தளங்களில் பல்வேறு காரணங்கள் கூறப்பட்டன.

இதையடுத்து தன்னை பற்றி அவதூறு பரப்பியதாக சில யுடியூப் சேனல்கள் மீது வழக்கு தொடர்ந்து வீடியோக்களை நீக்க வைத்துள்ளார். இந்த நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நாகசைதன்யாவுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமந்தா நீக்கி உள்ளார். திருமணம் ஆனதும் தேனிலவுக்கு சென்று பகிர்ந்த புகைப்படங்கள் மற்றும் கணவருடன் சுற்றுலா சென்று எடுத்து பதிவிட்ட புகைப்படங்கள், வீட்டில் மகிழ்ச்சியாக இருந்தபோது நாகசைதன்யாவுடன் எடுத்த விதவிதமான புகைப்படங்கள் அனைத்தையும் நீக்கி உள்ளார்.

பொதுவான நண்பர்களுடன் சேர்ந்து எடுத்த ஒரு புகைப்படத்தையும், நடிகர் ராணாவின் திருமணத்தின்போது எடுத்த புகைப்படத்தையும் மட்டும் நீக்கவில்லை. அந்த இரண்டு புகைப்படங்களிலும் சமந்தாவுடன் நாக சைதன்யா இருக்கிறார். நாக சைதன்யாவின் தந்தை நாகர்ஜுனா புகைப்படத்தை சமந்தா நீக்கவில்லை. சமந்தா பிரிந்தாலும் எங்களுக்கு பிரியமானவராக இருப்பார் என்று நாகர்ஜுனா தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts