169-வது படத்தில் நடிக்க தயாராகும் ரஜினி

ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த படம் தீபாவளி பண்டிகையில் திரைக்கு வருகிறது. இதில் குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் ஆகிய 4 கதாநாயகிகள் உள்ளனர். சிவா இயக்கி உள்ளார்.

கிராமத்து கதையம்சத்தில் தயாராகி உள்ளது. பாடல்கள் அடுத்தடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியாகி படத்துக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிக தியேட்டர்களில் அண்ணாத்த வெளியாவதால் சில படங்கள் தீபாவளி போட்டியில் இருந்து பின்வாங்கி விட்டன.

தற்போது திரையுலகினருக்கான மத்திய அரசின் உயரிய தாதா சாகேப் பால்கே விருதை ரஜினிகாந்த் டெல்லி சென்று பெற்று திரும்பி இருக்கிறார். அடுத்து புதிய படத்தில் நடிக்க ரஜினி தயாராகிறார்.

இது அவருக்கு 169-வது படம் ஆகும். இந்த படத்தை கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கி பிரபலமான தேசிங்கு பெரியசாமி டைரக்டு செய்ய வாய்ப்பு உள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது. புதிய படம் மற்றும் இயக்குனர் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது.

இந்த படத்துக்கு பிறகு ரஜினி நடிக்கும் 170-வது படத்தை தனுஷ் டைரக்டு செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ப.பாண்டி படத்தை தனுஷ் இயக்கி உள்ளார்.

Related posts