இந்த அரசாங்கம் இன்னும் 15 வருடங்களுக்கு ஆட்சியில்

தற்போதைய அரசாங்கத்தை இன்னும் 15 வருடங்களுக்கு விழ்த்த முடியாது என தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவரான துமிந்த சில்வா தெரிவித்துள்ளார்.
சுயதொழில் செய்பவர்களின் புதிய ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட வரவேற்பு நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
உரம், ஆசிரியர்கள் போன்ற பல்வேறு பிரச்சினைகளைத் தூண்டிவிட்டு, நாட்டில் போராட்டங்களில் ஈடுபட்டு அரசாங்கத்தைக் கவிழ்க்க பலர் முயற்சிக்கின்றனர் என்றும் துமிந்த சில்வா மேலும் தெரிவித்தார்.

—–

ஞானசார தேரர் தலைமையில் ஒரேநாடு ஒரேசட்டம் செயலணி உருவாக்கப்பட்டுள்ளதை டுவிட்டரில் கடுமையாக விமர்சித்துள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இந்த குழு முரண்பாட்டிற்கான வரைவிலக்கணம் என தெரிவித்துள்ளார்.
சட்டத்தை முறையான விதத்தில் ஒழுங்குபடுத்த முடியாத நிலையில் குழுவொன்றை அமைப்பதன் நோக்கம் என்னவெனவும் அவர்கேள்விஎழுப்பியுள்ளார்.
இந்த குழுவிற்கு குற்றவாளியொருவரை நியமித்துள்ளமை வேடிக்கையான விடயம் என சாணக்கியன் தெரிவித்துள்ளார்

Related posts