ஜெய்பீம் படத்தின் ‘தல கோதும் இளங்காத்து’

நடிகர் சூர்யா தன்னுடைய 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மூலம் தயாரித்து நடித்துள்ள படம் ’ஜெய்பீம்’. டைரக்டர் ஞானவேல் இந்த படத்தை இயக்கியுள்ளார். வருகிற நவம்பர் 2ம் தேதி அமேசான் பிரைமில் படம் வெளியாகிறது. உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் சூர்யா வழக்கறிஞராக நடித்திருக்கிறார். படத்தின் டிரைலர் கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்தப் படத்துக்கு ஷான் ரோல்டன் இசை அமைத்திருக்கிறார். தெருக்குரல்’ அறிவு எழுதி பாடியிருந்த பவர் சாங் என்ற பர்ஸ்ட் சிங்கிள் ஏற்கெனவே வெளியாகிருந்தது. இந்த நிலையில் இன்று படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகி உள்ளது. ‘தல கோதும் இளங்காத்து’ என்ற இந்த பாடலை ராஜுமுருகன் எழுதியுள்ளார், பிரதீப் குமார் பாடியுள்ளார்.

Related posts