படப்பிடிப்பில் டாப்சி காயம்

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக உயர்ந்த டாப்சி தற்போது இந்தியில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

ராஷ்மி ராக்கெட் என்ற படத்தில் விளையாட்டு வீராங்கனையாக நடித்து வருகிறார். குக்கிராமத்தில் வசிக்கும் தடகள வீராங்கனை தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்க செல்லும்போது எத்தகைய கஷ்டங்களை சந்திக்கிறார் என்பது கதை.

இந்த படத்துக்கு கடும் உடற்பயிற்சிகள் செய்து விளையாட்டு வீராங்கனைபோல் தன்னை மாற்றிக்கொண்டு டாப்சி நடித்து வருகிறார். இந்த நிலையில் ராஷ்மி ராக்கெட் படப்பிடிப்பில் டாப்சிக்கு அடிபட்டு காயம் ஏற்பட்டு உள்ளது.

இதுகுறித்து டாப்சி கூறும்போது, ‘‘படப்பிடிப்பில் நான் ஓடும் காட்சிகளை படமாக்கியபோது விழுந்து அடிப்பட்டு காயம் ஏற்பட்டது. ஓய்வு எடுக்காமல் நடித்தேன். அப்போது மீண்டும் பலத்த அடிபட்டு காயம் அடைந்தேன். காலை தூக்க முடியாத அளவுக்கு தசைகள் இறுகிவிட்டன. சில வாரங்கள் சிகிச்சை எடுத்தேன். பிசியோதெரபி சிகிச்சை எடுத்து மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்பேன்” என்றார்.

Related posts