விஜய் படத்தில் மகேஷ் பாபு?

விஜய் நடிக்க உள்ள புதிய படத்தில் தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவை சில காட்சிகளில் நடிக்க வைக்க முயற்சி நடப்பதாக இணையதளங்களில் தகவல் பரவி இருவரது ரசிகர்களையும் உற்சாகப்படுத்தி உள்ளது.

விஜய் நடிக்கும் ‘பீஸ்ட்‘ படவேலைகள் இறுதி கட்டத்தில் உள்ளது. இந்த படம் அடுத்த வருடம் கோடை விடுமுறையில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் அடுத்து நடிக்க உள்ள அவரது 66-வது படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி டைரக்டு செய்ய இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் தயாராக உள்ளது. இதர நடிகர் நடிகைகள் தேர்வு நடக்கிறது படப்பிடிப்பை விரைவில் தொடங்க உள்ளனர்.

இந்த படத்தில்தான் மகேஷ்பாபுவை நடிக்க வைக்க படக்குழுவினர் ஆர்வம் காட்டுவதாக கூறப்படுகிறது. விஜய்யும், மகேஷ்பாபுவும் நெருங்கிய நண்பர்களாக உள்ளனர். மகேஷ்பாபு நடித்த தெலுங்கு படங்களைத்தான் தமிழில் கில்லி, போக்கிரி பெயர்களில் ரீமேக் செய்து விஜய் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படங்கள் பெரிய வெற்றி பெற்றன.

இயக்குனர் வம்சி இயக்கத்தில் மகேஷ்பாபு நடித்த மகிரிஷி படம் தேசிய விருதை பெற்றது. எனவே விஜய்யுடன் சில காட்சிகள் நடிக்க மகேஷ்பாபு சம்மதிப்பார் என்று படக்குழுவினர் நம்புகிறார்கள். விஜய் படத்தின் பூஜையிலும் மகேஷ்பாபு கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts