சந்திரமுகி 2-ல் நடிக்க அனுஷ்காவுக்கு வாய்ப்பு?

ரஜினிகாந்த் நடித்து 2005-ல் திரைக்கு வந்து வெற்றி பெற்ற படம் சந்திரமுகி. இதில் பிரபு, ஜோதிகா, நயன்தாரா, வடிவேல், மாளவிகா ஆகியோரும் நடித்து இருந்தனர். பி.வாசு இயக்கினார்.

தற்போது சந்திரமுகி 2-ம் பாகம் தயாராக உள்ளது. இந்த படத்தையும் பி.வாசுவே இயக்குகிறார். இதில் கதாநாயகனாக ராகவா லாரன்ஸ் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க உள்ளது.

சந்திரமுகி-2 படத்தில் நடிக்கும் இதர நடிகர், நடிகை தேர்வு நடக்கிறது. இதில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்க தன்னை அணுகி இருப்பதாக வடிவேலு தெரிவித்து உள்ளார். இதில் அவர் நடிப்பார் என்று தெரிகிறது. கதாநாயகியாக நடிக்க அனுஷ்காவிடம் பேசி வருவதாக ஏற்கனவே தகவல் வெளியானது. இதுகுறித்து இயக்குனர் பி.வாசு விளக்கம் அளித்துள்ளார்.

அவர் கூறும்போது, “சந்திரமுகி 2-ம் பாகத்தில் ஜோதிகா வேடத்தில் யாரை நடிக்க வைப்பது என்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. அனுஷ்கா மட்டுமல்லாமல் சில முன்னணி கதாநாயகிகளிடம் பேசி வருகிறோம். சந்திரமுகியாக அனுஷ்கா நடிக்கிறாரா அல்லது வேறு நடிகை நடிப்பாரா என்பது படப்பிடிப்பு தொடங்கும்போது முடிவாகும்” என்றார். அனுஷ்கா ஏற்கனவே திகில் கதையம்சம் உள்ள அருந்ததி, பாகமதி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். பாகுபலி படத்தில் நடித்தும் பேசப்பட்டார்.

Related posts