வடிவேலுவுடன் நடிக்க மறுக்கும் கதாநாயகிகள்?

v வடிவேலுவுடன் நடிக்க படகுழுவினர் கதாநாயகிகளை அணுகியதாகவும் அவர்களும் தயக்கம் காட்டுவதாகவும் கூறப்படுகிறது.

நகைச்சுவை நடிகர் வடிவேலு தடை நீங்கியதால் சுராஜ் இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார். இந்த படத்துக்கு நாய் சேகர் என்று தலைப்பு வைத்து இருப்பதாக அறிவித்து பட வேலைகளை தொடங்கினர். ஆனால் சதீஷ் கதாநாயகனாக நடிக்க நாய் சேகர் என்ற பெயரில் இன்னொரு படம் தயாராகி வருகிறது. சதீஷ் படக்குழுவினர் நாய் சேகர் தலைப்பை முறைப்படி பதிவு செய்து வைத்துள்ளதால் அதே பெயரை வடிவேலு படத்துக்கு பயன்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

இதையடுத்து வடிவேலு படத்துக்கு ‘நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்’ என்ற தலைப்பை வைக்க படகுழுவினர் ஆலோசிக்கிறார்கள். இந்த படத்தில் வடிவேலுவுடன் முன்னணி கதாநாயகியை நடிக்க வைக்க படக்குழுவினர் திட்டமிட்டு நடிகை தேர்வில் ஈடுபட்டு உள்ளனர். படத்தில் வடிவேலுவுக்கு ஜோடி இல்லை என்றும், அவருக்கு இணையான முக்கிய கதாபாத்திரத்தில் கதாநாயகி நடிப்பார் என்றும் கூறப்படுகிறது. ஆனாலும் முன்னணி கதாநாயகிகள் அவருடன் நடிக்க மறுப்பதாக தகவல் பரவி வருகிறது. பிரியா பவானி சங்கர், கீர்த்தி சுரேஷ் ஆகியோரையும் அணுகியதாகவும் அவர்களும் தயக்கம் காட்டுவதாகவும் கூறப்படுகிறது.

Related posts