கன்னட ரீமேக்கில் நடிக்கும் பிரபுதேவா

ஓ மை கடவுளே படத்தின் கன்னட ரீமேக்கில் நடிக்கும் பிரபுதேவா.

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணிபோஜன் உள்ளிட்டோர் நடித்து 2020-ல் திரைக்கு வந்த ஓ மை கடவுளே படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. வசூலும் குவித்தது. இதில் விஜய்சேதுபதி கடவுள் கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.

ஓ மை கடவுளே படம் தெலுங்கு, கன்னடம். இந்தி ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. கன்னட ரீமேக்கை பிரபுதேவாவின் தம்பி நாகேந்திர பிரசாத் முதல் தடவையாக டைரக்டு செய்து இயக்குனராக அறிமுகமாகிறார். இதில் புனித் ராஜ்குமார், கிருஷ்ணா, ரோஷினி பிரகாஷ், சங்கீதா ரீங்கேரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இந்த படத்தில் பிரபுதேவாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவர் புனித் ராஜ்குமாருடன் இணைந்து நடனமாடும் பாடல் காட்சி தற்போது படமாகி உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு 90 சதவீதம் முடிந்துள்ளது. பிரபுதேவா தமிழில் 4 புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இவற்றின் படப்பிடிப்பு அடுத்தடுத்து தொடங்க உள்ளது.

Related posts