ஹன்சிகா மோத்வானியின் ‘மஹா’ படம் வெளிவர தாமதம் ஏன்?

ஹன்சிகா மோத்வானி நடித்துள்ள 50-வது படம், ‘மஹா’ இது, கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையம்சம் கொண்ட படம். படப்பிடிப்பு மற்றும் படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் அனைத்தும் முடிவடைந்தது. படத்துக்கு தணிக்கை குழு, ‘யு’ சான்றிதழ் வழங்கியிருக்கிறது. தணிக்கை முடிவடைந்த பிறகும் ‘மஹா’ படம் திரைக்கு வர தாமதம் ஏன்? என்பது பற்றி படக்குழுவினர் கூறியதாவது:-

“மஹா, ’ ஹன்சிகாவின் 50-வது படம் என்ற அறிவிப்பு வெளியானதுமே ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டு விட்டது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஈடுசெய்யும் வகையில், இதுவரை பார்த்திராத தோற்றத்தில், ஹன்சிகா கலக்கி இருக்கிறார்.

அவருடன் பல நட்சத்திர நடிகர்-நடிகைகள் தங்கள் முத்திரைகளை பதித்துள்ளனர். ஜமீல் இயக்கியிருக்கிறார். கொரோனா மற்றும் ஊரடங்கு காரணமாகவே வெளியீடு தேதியில் தாமதம் ஏற்பட்டுள்ளது. விரைவில் படத்தை திரைக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் நடக்கிறது.”

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related posts