இலங்கையில் பலி எண்ணிக்கை 12 ஆயிரம் ஆக உயர்வு

இலங்கையில் கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதுபற்றி அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் வெளியிட்டு உள்ள செய்தியில், கடந்த 24 மணி நேரத்தில் 1,530 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 2 ஆயிரத்து 302 ஆக உயா்ந்துள்ளது.

இதேபோன்று, கடந்த 24 மணி நேரத்தில் 84 கொரோனா நோயாளிகள் உயிரிழந்து உள்ளனா். இதனால் கொரோனாவுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 22 ஆக உயர்ந்து உள்ளது என தெரிவித்து உள்ளது.

Related posts