விஜய் படத்தில் புதுமுக நடிகை

விஜய்யின் பீஸ்ட் படம் மூலம் கேரளாவை சேர்ந்த அபர்ணா தாஸ் தமிழில் அறிமுகமாகிறார்.

விஜய்யின் பீஸ்ட் படம் மூலம் கேரளாவை சேர்ந்த அபர்ணா தாஸ் தமிழில் அறிமுகமாகிறார். இந்த படத்தில் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார். தற்போது சென்னை பூந்தமல்லி அருகே நடந்து வரும் பீஸ்ட் படத்தின் 3-ம் கட்ட படப்பிடிப்பில் அபர்ணா தாஸ் இணைந்துள்ளார். அவர் விஜய்யுடன் சேர்ந்து நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.

தமிழ் படங்களில் தொடர்ந்து புதுமுக நடிகைகள் அறிமுகமாகி வருகிறார்கள். அந்த பட்டியலில் புதிய வரவாக அபர்ணா தாஸ் இணைந்துள்ளார். இவர் எம்.பி.ஏ பட்டதாரி டிக்டாக்கில் வீடியோக்கள் வெளியிட்டு பிரபலமாகி மலையாளத்தில் அந்திக்காடு என்ற படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார். பின்னர் மனோகரம் என்ற மலையாள படத்தில் கதாநாயகியானார். இப்போது தமிழ் படத்திலும் அறிமுகமாகி உள்ளார்.

பீஸ்ட் படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். இதில் நாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். யோகிபாபு, வி.டி.வி. கணேஷ், மலையாள நடிகர் ஷன் டாம் சாக்கோ ஆகியோரும் நடிக்கின்றனர்.

Related posts