‘பூமிகா’ ஒளிபரப்புத் தேதி அறிவிப்பு

பூமிகா’ திரைப்படம் நேரடியாகத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தேதியை அறிவித்துள்ளது படக்குழு.
திரையரங்குகள் மூடப்பட்டு இருப்பதால் பல்வேறு படங்கள் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டு வருகின்றன. தற்போது அதிலிருந்து மாறி சில படங்கள் நேரடியாகத் தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் இணைந்துள்ளது ‘பூமிகா’.
ஆகஸ்ட் 22-ம் தேதி மதியம் 3 மணிக்கு விஜய் தொலைக்காட்சியில் ‘பூமிகா’ ஒளிபரப்பாகும் என்று படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். அன்றைய ஒளிபரப்பு முடிந்தவுடன், நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் ரதீந்திரன் ஆர்.பிரசாத் இயக்கியுள்ளார். ஹாரர் – த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுக்க மலைப் பகுதிகளில் நடைபெற்றுள்ளது. இது ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள 25-வது படமாகும். இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராக ராபர்ட், இசையமைப்பாளராக ப்ரித்வி சந்திரசேகர், எடிட்டராக ஆனந்த் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.

Related posts