விஷம் வைத்து கொல்லப்பட்ட 46 குரங்குகள்

கர்நாடகாவில் 40க்கும் மேற்பட்ட குரங்குகள் விஷம் வைத்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவின் ஹசன் மாவட்டம் சக்லேஷ்பூரில் 60 குரங்குகளுக்கு விஷம் கொடுத்து கொன்று கோணிப்பைகளில் கட்டி சக்லேஷ்பூர் – பேகூர் சாலை ஓரத்தில் வீசியுள்ளனர்.தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்க்கையில் 14 குரங்குகள் உயிருடன் மயக்க நிலையில் இருந்தது தெரியவந்தது. 14 குரங்குகளையும் மீட்டு கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வருகின்றனர். எஞ்சிய 46 குரங்குகள் உயிரிழந்தன. இதுகுறித்து கர்நாடக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.சமூக ஊடகங்களில் இதுகுறித்த படங்களையும் வீடியோக்களையும் பதிவிட்டு, ‘விலங்குகள் மீதான இதுபோன்ற கொடூர சம்பவங்கள் அதிகரித்து வருவது கவலையளிக்கிறது’ என, நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Related posts