உண்மை சம்பவ கதையில் வக்கீல் வேடத்தில் சூர்யா

சூர்யா நடித்து வெளிவந்த ‘சூரரைப்போற்று’ திரைப்படம், உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட கதை. அந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, சூர்யா தனது 39-வது படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தை புது டைரக்டர் ஞானவேல் டைரக்டு செய்திருக்கிறார். சூர்யாவின் 2டி நிறுவனமே இப்படத்தை தயாரித் திருக்கிறது.

இதில் சூர்யா, வக்கீல் வேடத்தில் நடித்துள்ளார். படம் சென்னை மற்றும் சுற்றுவட்டாரத்தில் வளர்ந்திருக்கிறது. படத்துக்கு, ‘ஜெய் பீம்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.இதுவும் ஒரு உண்மை சம்பவத்தைக் கருவாகக் கொண்ட படம்தான். சமூக நீதிக்காக போராடும் ஒரு வக்கீலை பற்றிய கதை. இதில் மலைவாழ் மக்களுக்காக போராடும் வக்கீலாக சூர்யா நடித்து இருக்கிறார். படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்தது.

இதையடுத்து பாண்டிராஜ் இயக்கத்தில், சூர்யா தனது 40-வது படத்தில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். படத்துக்கு, ‘எதற்கும் துணிந்தவன்’ என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள். படப்பிடிப்பு காரைக்குடியில் தொடங்கி, தொடர்ந்து நடக்கிறது.

Related posts