ஜப்பானில் வசூல் குவிக்கும் ‘தர்பார்’

ரஜினிகாந்துக்கு ஜப்பானிலும் ரசிகர்கள் உள்ளனர். அங்கு அவருக்கு ரசிகர் மன்றமும் தொடங்கி இருக்கிறார்கள். முத்து படத்தை பார்த்தபிறகே ஜப்பானியர்கள் ரஜினி ரசிகர்களாக மாறினர். ரஜினியின் புதிய படங்கள் வெளியாகும்போதெல்லாம் சென்னை வந்து படத்தை பார்த்து விட்டு செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.

பாபா ரிலீசானபோது படத்தில் ரஜினி தலைப்பாகை அணிந்து இருந்ததுபோல் தலைப்பாகை அணிந்து வந்து படம் பார்த்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். இந்த நிலையில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து 2020-ல் திரைக்கு வந்த தர்பார் படத்தை தற்போது மொழி மாற்றம் செய்து ஜப்பானில் வெளியிட்டு உள்ளனர். இந்த படம் திரையிடப்பட்ட தியேட்டர்களில் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டு இருக்கிறது. ஜப்பானியர்கள் கூட்டம் கூட்டமாக வந்து படம் பார்க்கிறார்கள். நல்ல வசூலும் குவித்து வருகிறது. இதனால் கூடுதலாக கியோட்டோ, நகோயா, நிகிட்டா ஆகிய சிறிய நகரங்களிலும் தர்பார் திரையிடப்பட்டு உள்ளது.

Related posts