ஆஸ்கார் விருதுக்கு தகுதியானவர் சூர்யா: கன்னட நடிகர் சுதீப்

சூர்யா நடித்து கடந்த வருடம் ஓ.டி.டி. தளத்தில் வெளியான சூரரை போற்று படத்துக்கு அனைத்து தரப்பினர் மத்தியிலும் வரவேற்பு கிடைத்தது. சூர்யாவின் நடிப்பை பலரும் பாராட்டினர். இந்த படத்தை ஆஸ்கார் விருதுக்கு அனுப்பி தேர்வாகவில்லை.
சூரரை போற்று இந்தியில் ரீமேக் ஆக உள்ளது. இந்தநிலையில் நான் ஈ, புலி, பாகுபலி படங்கள் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான கன்னட நடிகர் சுதீப் அளித்துள்ள பேட்டியில், “சூரரை போற்று படத்தை ஓ.டி.டி.யில் பார்த்தேன். நிஜமாக சொல்ல வேண்டும் என்றால் சூர்யாவுக்கு ஆஸ்கார் விருது வழங்கி இருக்க வேண்டும். ஆஸ்கார் விருதுக்கு சூர்யா தகுதியானவர். அந்த படத்தில்
பிழை இல்லாத நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். ஒரு படத்தை பார்ப்பதும் கதையாக படிப்பதும் வெவ்வேறானது. இந்த படம் கதாநாயகனை கொண்டாடும் படம் இல்லை. இதில் நடிக்க அவர் முன்வந்ததற்கு பெரிய துணிச்சல் வேண்டும்” என்று கூறியுள்ளார்.

Related posts