தமிழ் சினிமாவில், 40 வருடங்களை கடந்த கதாநாயகிகள்

தமிழ் திரையுலகில், ஒரு சில கதாநாயகிகளே 40 வருடங்களை கடந்து நடித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களில் 4 பேர் முக்கியமானவர்கள். அவர்கள் வருமாறு:-

1. ராதிகா சரத்குமார். அறிமுகமான படம்: கிழக்கே போகும் ரெயில். வெளியான வருடம்: 1978.

2. அம்பிகா. அறிமுகமான படம்: தரையில் வாழும் மீன்கள். வெளியான வருடம்: 1980.

3. விஜயசாந்தி. அறிமுகமான படம்: கல்லுக்குள் ஈரம். வெளியான வருடம்: 1980.

4. பூர்ணிமா பாக்யராஜ்: அறிமுகமான படம்: நெஞ்சில் ஒரு முள். வெளியான வருடம்: 1981.

இவர்களை அடுத்து ரேவதி 38 வருடங்களாக நடித்துக் கொண்டிருக்கிறார். அறிமுகமான படம்: மண்வாசனை. வெளியான வருடம்: 1983.

ரம்யா கிருஷ்ணன், 37 வருடங்களாக நடித்துக் கொண்டிருக்கிறார். அறிமுகமான படம்: வெள்ளை மனசு. வெளியான வருடம்: 1984.

Related posts