சூர்யா நடிக்கும் 40வது படம் ‘எதற்கும் துணிந்தவன்’

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் 40வது படத்திற்கு ‘எதற்கும் துணிந்தவன்’ என பெயரிடப்பட்டுள்ளது.

சூர்யாவின் நடிப்பில் வெளியாக இருக்கும் 40 ஆவது படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்குகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் தற்பொழுது ரஜினியின் அண்ணாத்த, விஜய்யின் பீஸ்ட், சூர்யாவின் 40 ஆவது படங்கள் உருவாகிறது.

இந்நிலையில், நாளை நடிகர் சூர்யா தனது பிறந்தநாளை கொண்டாடவுள்ள நிலையில், சூர்யாவின் 40 ஆவது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிப்பட்டிருந்தது. தற்போது இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு ‘எதற்கும் துணிந்தவன்’ என பெயரிடப்பட்டுள்ளது. எதற்கும் துணிந்தவன்’ படத்தின் முதல் பார்வையை வெளியிட்டது படக்குழு. இதனை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

Related posts