நெற்றிக்கண் திரைப்படம் நேரடியாக ஓடிடி வெளியீடு

இயக்குநர் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நடிகை நயன்தாரா நடிக்கும் நெற்றிக்கண் திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மிலிந்த் ராவ் இயக்கத்தில் உருவாகும் இந்தத் திரைப்படத்துக்கு கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைக்கிறார். ஆர்டி ராஜசேகர் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ள இந்தத் திரைப்படத்தில் அஜ்மல், மணிகண்டன், சரண் உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இந்த திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

—–

6 புதிய படங்களில் நடிக்க நயன்தாரா தயாராகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

நயன்தாரா தற்போது ரஜினியுடன் அண்ணாத்த, விஜய்சேதுபதி ஜோடியாக காத்துவாக்குல ரெண்டு காதல் மற்றும் நெற்றிக்கண் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். நெற்றிக்கண் படத்தில் பார்வையற்றவராக வருகிறார். இதன் படப்பிடிப்பு முடிந்து ஓ.டி.டி.யில் வெளியிட பேசி வருகிறார்கள். அண்ணாத்த படத்தில் வழக்கறிஞர் வேடம் ஏற்றுள்ளார்.

இந்த நிலையில் மேலும் 6 புதிய படங்களில் நடிக்க நயன்தாரா தயாராகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதில் ஒரு படத்தை வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குனராக இருந்த விக்னேஷ் இயக்குவதாகவும், இன்னொரு படத்தை எலி பட இயக்குனர் யுவராஜ் டைரக்டு செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது.

கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள மேலும் 2 புதிய படங்களில் நடிக்க நயன்தாரவை ஒப்பந்தம் செய்து உள்ளதாகவும், இதுபற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. இதுபோல் 2 தெலுங்கு படங்களில் நடிக்கவும் கதை கேட்டு இருக்கிறார். இதனால் அடுத்த 2 வருடங்களுக்கு வேறு புதிய படங்களில் நடிக்க அவரிடம் கால்ஷீட் இல்லை என்று கூறப்படுகிறது.

Related posts