தடுப்பூசி போட்ட சினேகா, பிரசன்னா

நடிகர், நடிகைகள் கொரோனா பரவலை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.

நடிகர், நடிகைகள் கொரோனா பரவலை தடுக்க முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல், கிருமி நாசினியால் கைகளை அடிக்கடி சுத்தம் செய்தல் போன்றவற்றை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.

நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சூர்யா, கார்த்தி, ஆர்யா, நடிகைகள் ஜோதிகா, நயன்தாரா, ஐஸ்வர்யா ராஜேஷ், மாளவிகா மோகனன், சிம்ரன், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ஆகியோர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டு புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து பொதுமக்களையும் தடுப்பூசி போட்டுக் கொள்ளும்படி வலியுறுத்தினர்.

இந்த நிலையில் நட்சத்திர தம்பதிகளான நடிகர் பிரசன்னா, நடிகை சினேகா ஆகியோரும் முதல் தவணை கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர். பிரசன்னா தற்போது விஷால் இயக்கும் துப்பறிவாளன் 2-ம் பாகத்தில் நடிக்கிறார்.

Related posts