போராட்டங்கள் தடை..! பாராளுமன்ற உறுப்பினராக, பசில் ?

பொதுமக்கள் அதிகளவில் ஒன்றுகூடும் பொது நிகழ்வுகள், ஆர்ப்பாட்டங்கள் போன்ற செயற்பாடுகள், மீள அறிவிக்கப்படும் வரை மேற்கொள்ளக்கூடாது என, பொலிஸ் தலைமையகத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள DDG (PHS) 1/DO2/713/2017/20 எனும் கடிதத்தின் அடிப்படையில் பொலிஸ் மாஅதிபரினால் குறித்த உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் அதிகளவில் ஒன்றுகூடும் பொது நிகழ்வுகள், ஆர்ப்பாட்டங்கள் போன்ற செயற்பாடுகள் காரணமாக, கொவிட்-19 தொற்றும் பாரிய அபாயம் காணப்படுவதால் இவ்வாறு ஒன்றுகூடுவதை மேற்கொள்ளக் கூடாது என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

குறித்த தனிமைப்படுத்தல் உத்தரவு தொடர்பில் அதனை மீறுவோர் தொடர்பில் பொலிஸார் உரிய நடவடிக்கைகளை எடுப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

—-

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக, பசில் ராஜபக்‌ஷவின் பெயர் குறிக்கப்பட்ட அதி விசேட வர்த்மானி வெளியிடப்பட்டுள்ளது.

அக்கட்சியின் தேசியப் பட்டியில் எம்.பியாக இருந்த ஜயந்த கெட்டகொட நேற்றையதினம் (06) அப்பதவியிலிருந்து விலகி, பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு இராஜினாமா கடிதத்தை ஒப்படைத்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து அவரது பெயர் பரிந்துரைக்கப்பட்ட ஆவணங்கள் பொதுஜன பெரமுன கட்சியினால் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.அதற்கமைய இன்றையதினம் (07) தேர்தல்கள் ஆணைக்குழுவினால் குறித்த அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

Related posts