அஜித் ரோஹண உள்ளிட்ட 6 SDIG, ஒரு DIG இற்கு இடமாற்றம்

ஆறு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர்கள் (SDIG) மற்றும் ஒரு பிரதிப் பொலிஸ் மாஅதிபர் ஆகிய 7 சிரேஷ்ட பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளன.

சேவையின் தேவையின் அடிப்படையில்உடன் அமுலுக்கு வரும் வகையில் குறித்த இடமாற்றங்கள் வழங்கப்ப்டுள்ளன.

அந்த வகையில், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண, குற்றவியல் மற்றும் போக்குவரத்து பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, நிர்வாகப் பிரிவின் பொறுப்பின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபராக நந்தன முனசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

எல்.எஸ். பதிநாயக்க பிரஜா பொலிஸ் மற்றும் சுற்றாடல் பிரிவுக்கான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபராக இடமாற்றப்பட்டுள்ளார்.

எஸ்.எம். தர்மரத்ன வடமேல் மாகாணம் மற்றும் வட மத்திய மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபராக இடமாற்றப்பட்டுள்ளார்.

டபிள்யூ.கே. ஜயலத் வட மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆர்.எல். கொடிதுவக்கு சப்ரகமுவ மாகாணத்தின் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபராகவும், ஊவா மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.

எம்.டி.ஆர்.எல். தமிந்த, தென் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜீ.ஏ.என்.எல். விஜேசேன, அநுராதபுர மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மாஅதிபராக இடமாற்றப்பட்டுள்ளார்.

Related posts