அமெரிக்காவில் ரசிகர்களை சந்தித்த ரஜினி

மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள அமெரிக்கா சென்று இருக்கிறார். அங்குள்ள மருத்துவமனையில் உடல் பரிசோதனை செய்து கொண்டார்.

நடிகர் ரஜினிகாந்த் அண்ணாத்த படத்தை முடித்துவிட்டு மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள அமெரிக்கா சென்று இருக்கிறார். அங்குள்ள மருத்துவமனையில் உடல் பரிசோதனை செய்து கொண்டார். பரிசோதனை முடிந்து மருத்துவமனையில் இருந்து மகள் ஐஸ்வர்யாவுடன் ரஜினிகாந்த் வெளியே நடந்து வரும் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியானது.

ரஜினி, இரண்டு வாரங்கள் அமெரிக்காவில் தங்கி இருந்துவிட்டு சென்னை திரும்ப உள்ளார். அவர் அமெரிக்கா வந்துள்ள தகவல் அறிந்து ரசிகர்கள் மற்றும் ரசிகைகள் அவரை காண வந்தனர். ரசிகர்களை ரஜினி சந்தித்தார். அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டார். ரஜினியுடன் எடுத்த புகைப்படங்களை ரசிகர்கள் வலைத்தளத்தில் வெளியிட அவை வைரலாகின்றன.

ரஜினி சென்னை திரும்பியதும் மீண்டும் புதிய படத்தில் நடிக்கும் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கார்த்திக் சுப்புராஜ், தேசிங்கு பெரியசாமி ஆகியோரில் ஒருவர் ரஜினி படத்தை இயக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் பரவி வருகிறது.

Related posts