கூட்டமைப்புக்கும் – அரசுக்கும் இடையில் விரைவில் பேச்சு

இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கும் இடையில் விரைவில் பேச்சுவார்த்தை இடம்பெறும் அதில் தமிழ் தேசிய பிரச்சினைக்கான அரசியல் தீர்வு பற்றியே பேசப்படும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

யாழ்.வடமராட்சி முள்ளிப்பகுதியில் இயற்கை உரம் தயாரிக்கும் தொழிற்சாலை நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை(27) மாலை 4.00 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அரசாங்கத்துக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் பேச்சுவார்த்தை இடம்பெற உள்ளமை தொடர்பில் தொலைபேசி மூலமாக இரண்டு தடவைகள் அறிவிக்கப்பட்டது. ஆனால் அது பின்னர் ரத்து செய்யப்பட்டது. தற்போது எழுத்து மூலமாக சம்பந்தனுக்கு ஜனாதிபதி அறிவித்துள்ளார். இப் பேச்சுவார்த்தை மிக விரைவில் இடம்பெறும் என தெரிவித்துள்ளதுடன், அதில் நாங்கள் பிரதானமாக பேசவிருப்பது தமிழ் தேசிய பிரச்சினைக்கான அரசியல் தீர்வு பற்றி என அவர் தெரிவித்தார்.

Related posts