பேரறிவாளனின் பரோல் மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு

பேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட பரோல் மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைத் தண்டனை பெற்று வரும் பேரறிவாளன் அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் பாதிக்கப்பட்டு வந்தார். இதையடுத்து அவருக்கு 30 நாள்கள் பரோல் வழங்க வேண்டும் என்று அவரது தாயார் அற்புதம்மாள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்திருந்தார்.

இதையடுத்து பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல் வழங்கப்பட்டது. கடந்த மே 28 ஆம் தேதி சென்னை புழல் சிறையில் இருந்து பரோல் விடுப்புக்காக விடுவிக்கப்பட்டார்.

இதனிடையே கடந்த 19 ஆம் தேதி, பேரறிவாளனுக்கு சிகிச்சை நடைபெற்று வருகிறது. சிகிச்சை தொடா்ச்சியாக அளித்தால் தான் நன்மை என டாக்டா்கள் கூறுவதால் மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு செய்ய வேண்டும் என அவரது தாயார் அற்புதம்மாள் முதல்-அமைச்சருக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த கோரிக்கையை ஏற்று பேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட பரோலை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

ஏற்கனவே ஒரு மாதம் பரோல் வழங்கப்பட்டிருந்த நிலையில் மேலும் ஒரு மாதத்திற்கு பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Related posts