வலிமையின் கொண்டாட்டம் விரைவில் நடைபெறும்

அஜித்குமார் ரசிகர்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் ‘வலிமை’ படத்தின் கொண்டாட்டம் விரைவில் நடைபெறும்’’ என்று டைரக்டர் எச்.வினோத் கூறினார்.

‘‘வலிமை படத்தை பற்றிய புதிய தகவல்கள் எதையும் கசிய விடாமல் இருப்பது ஏன்? என்று கேட்டு என்னையும், தயாரிப்பாளர் போனிகபூரையும் விடாமல் ரசிகர்கள் துரத்திக்கொண்டிருக்கிறார்கள். ஆதங்கப்படுகிறார்கள்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பாக படத்தின் இசையை பற்றி இசையமைப்பாளர் யுவன் வெளியிட்ட தகவல்கள், ரசிகர்களின் ஆர்வத்தை மேலும் தூண்டியிருக்கிறது.

கோடம்பாக்கத்தில் அனைவரும் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ‘வலிமை’யின் கொண்டாட்டம் விரைவில் நடைபெறும். இந்த படத்துக்கு ஆதரவு கொடுப்பவர்கள் அனைவருக்கும் நன்றி. படத்தின் முதல் தோற்றத்தை தயாரிப்பாளர் போனிகபூர் விரைவில் வெளியிடுவார்.அந்த சம்பவம் தரமாக இருக்கும். கவலை வேண்டாம்’’ என்று டைரக்டர் எச்.வினோத் கூறியிருக்கிறார். ‘‘ஏதோ நல்லதாக சிறப்பானதாக சீக்கிரமே கொடுத்தால், சந்தோசம்’’ என்று ரசிகர்கள் கூறுகிறார்கள்.

Related posts