நயன்தாரா ரூ.10 கோடி சம்பளம் கேட்கிறார்?

தென்னிந்திய கதாநாயகிகளில் மிக அதிக சம்பளம் வாங்குபவர் நயன்தாராதான்.

நயன்தாரா இவர் ஒரு படத்துக்கு ரூ.5 கோடி சம்பளம் வாங்கி வந்தார். சினிமாவில் சம்பாதித்த பணத்தை ரியல் எஸ்டேட்டிலும், சினிமாவிலும் முதலீடு செய்து வருகிறார்.

அவரும், அவருடைய காதலர் விக்னேஷ் சிவனும் சேர்ந்து, ‘ரவுடி பிக்சர்ஸ்’ என்ற பட நிறுவனத்தை தொடங்கினார்கள். இந்த பட நிறுவனம் படங்கள் தயாரிப்பதுடன், மற்றவர்கள் படங்களை வாங்கி வெளியிடுகிறது.

அந்த வகையில்தான் ரவுடி பிக்சர்ஸ், ‘நெற்றிக்கண்’ படத்தை தயாரித்தது. நயன்தாரா கதைநாயகியாக வரும் இந்த படம், ரூ.8 கோடி செலவில் தயாரிக்கப்பட்டு ரூ.25 கோடிக்கு விற்பனையாகி இருக்கிறது.

தயாரிப்பாளருக்கு ரூ.17 கோடி லாபம். இந்த கணக்கை வைத்து, நயன்தாரா தனது சம்பளத்தை இரட்டிப்பாக (ரூ.10 கோடி) உயர்த்தி விட்டாராம்.

Related posts