தடுப்பூசியை தவிர்ப்பது ஆபாத்தானது – பிரதமர் மோடி

கொரோனா அச்சுறுத்தல் இருப்பதால் மக்கள் தடுப்பூசி போடுவதிலும், கொரோனா நெறிமுறைகளைப் பின்பற்றுவதிலும் கவனம் செலுத்த வேண்டும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

மன் கி பாத் வானொலி நிகழ்ச்சி மூலம் பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றினார். நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, தடுப்பூசி இயக்கம் குறித்தும் தடுப்பூசியின் முக்கியத்துவம் குறித்த்தும் பேசினார்.

கொரோனாவுக்கு எதிராகப் போராடி நாம் ஒரு அசாதாரண மைல்கல்லை அடைந்துள்ளோம். ஜூன் 21 அன்று புதிய தடுப்பூசி இயக்கம் தொடங்கியது. ஒரு நாளில் 86 லட்சத்திற்கும் அதிகமானோர் இலவச தடுப்பூசி செலுத்தி சாதனை நிகழ்த்தப்பட்டது.

நான் இரண்டு டோஸையும் போட்டுக்கொண்டேன். என் அம்மாவுக்கு கிட்டத்தட்ட நூறு வயது, அவர் இரண்டு தடுப்பூசிகளையும் எடுத்துக்கொண்டார். தயவுசெய்து தடுப்பூசிகள் தொடர்பான எதிர்மறையான வதந்திகளை நம்ப வேண்டாம்.

இந்தியாவில் உள்ள பல கிராமங்கள் 100 சதவீதம் தடுப்பூசி போட்டுள்ளன. அனைவரும் அறிவியலை நம்புங்கள். நம் விஞ்ஞானிகளை நம்புங்கள். பலர் தடுப்பூசியை எடுத்துள்ளனர். அவர்களும் தடுப்பூசி போட்டுகொண்டுள்ளனர்.

மத்தியப் பிரதேசத்தின் பெத்துல் மாவட்டத்தில் உள்ள துலாரியா கிராமத்தைச் சேர்ந்த இரண்டு கிராமவாசிகளுடன் பேசிய அவர், அவர்களின் சந்தேகங்களுக்கு மத்தியில் தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு பிரதமர் வலியுறுத்தினார்.

தயவுசெய்து பயத்திலிருந்து விடுபடுங்கள். தடுப்பூசி செலுத்திய பின் சில நேரங்களில் மக்களுக்கு காய்ச்சல் வரக்கூடும், ஆனால் அது மிகவும் லேசானது மற்றும் சில மணி நேரம் மட்டுமே நீடிக்கும். கொரோனா தடுப்பூசியைத் தவிர்ப்பது மிகவும் ஆபத்தானது.

இன்னும் கொரோனா அச்சுறுத்தல் இருப்பதால் மக்கள் தடுப்பூசி போடுவதிலும், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றுவதிலும் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

Related posts