இலங்கை அணி படுதோல்வி!

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் இன்று இடம்பெற்ற மூன்றாவதும் இறுதியுமான டி20 போட்டியிலும் இங்கிலாந்து அணி வெற்றிப் பெற்றுள்ளது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தேர்ந்தெடுத்தது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட் இழப்பிற்கு 180 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
அவ்வணி சார்பில் டேவிட் மாலன் 76 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார்.
பந்து வீச்சில் துஸ்மந்த சமீர 4 விக்கெட்டுக்களை அதிகபட்சமாக வீழ்த்தினார்.
இந்நிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 18.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும இழந்து 91 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.
இலங்கை அணி சார்பில் பினுர பெர்னாண்டோ அதிகபட்சமாக 20 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.
மேலும், பந்துவீச்சில் டேவிட் வில்லி 3 விக்கெட்டுக்களையும், சேம் கரன் 2 விக்கெட்டுக்களையும் அதிகபட்சமாக வீழ்த்தினர்.
அதன்படி, 89 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்ற இங்கிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் தொடரை வௌ்ளையடிப்பு செய்துள்ளது.

Related posts