முதன்முதலாக தனுஷ், நேரடி தெலுங்கு படத்தில் நடிக்கிறார்

‘ஜெகமே தந்திரம்’ படத்தை அடுத்து தனுஷ் முதன்முதலாக ஒரு நேரடி தெலுங்கு படத்தில் நடிக்கிறார்.

‘ஜெகமே தந்திரம்’ படத்தை அடுத்து தனுஷ் முதன்முதலாக ஒரு நேரடி தெலுங்கு படத்தில் நடிக்கிறார். படத்துக்கு பெயர் சூட்டப்படவில்லை. தெலுங்கு பட உலகின் முன்னணி டைரக்டர்களில் ஒருவரான சேகர் கம்முலா இயக்கு கிறார். படத்தை பற்றி அவர் கூறியதாவது:

‘‘தேசிய விருது பெற்ற தனுஷ், பன்முக திறமை கொண்டவர். அவரை வைத்து படத்தை இயக்கு வதற்காக பெருமைப்படுகிறேன். நானும், அவரும் இணைந்து பணி புரிய இருக்கும் முதல் படம், இது.

படம் தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் தயாராகிறது. எந்த ஒரு கதாபாத்திரத்தை கொடுத்தாலும், அதை சிறப்பாக செய்வதற்கு தனுஷ் 100 சதவீதம் உழைப்பவர். அதனால்தான் அவர் தமிழ் பட உலகின் முன்னணி நாயகனாக இருக் கிறார்.

என் இயக்கத்தில் அவர் நடிக்கும் தெலுங்கு படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.’’

Related posts