அமெரிக்காவில் சீட்டு கட்டு போல் சரிந்த 12 மாடி கட்டிடம்

அமெரிக்காவில் சீட்டு கட்டுப்போல் சரிந்த 12 மாடி கட்டிடம் 100க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் மியாமி கடற்கரை அருகே 12 மாடிகளை கொண்ட குடியிருப்பு வளாகம் உள்ளது.லத்தீன் அமெரிக்காவின் பராகுவே, கொலம்பியா, வெனிசுலா, அர்ஜெண்டினா, உருகுவே நாடுகளைச் சேர்ந்தவர்கள் அதில் அதிகம் தங்கி இருந்தனர்.1981 களில் கட்டப்பட்ட இந்த கட்டிடத்தின் பராமரிப்பு பணி நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் இந்த் கட்டிடம் இன்று அதிகாலை 1 மனி அள்வில் சீட்டுக்கட்டு போல் சரிந்துவிழுந்தது. கட்டிடத்தின் ஒரு பகுதி முழுவதும் சரிந்தது. குடியிருப்பின் வடகிழக்கு பகுதியில் உள்ள சுமார் 55 குடியிருப்புகள் இடிந்து சரிந்துள்ளது.இந்த கோர விபத்தில் நூற்றுக்கும் மேற்பட்டார் சிக்கி உள்ளதால் மீட்பு பணிகள் துரிதப்பட்டுள்ளன.

இடிபாடுகளில் சிக்கிய 12 வயது சிறுவன் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர் , 100க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. ஆனால் உயிரிழப்பு எண்ணிக்கை இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. பலர் காயமடைந்துள்ளனர் அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

சம்பவம் நடந்தபோது கட்டிடத்தில் எத்தனை பேர் இருந்தார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை. காணாமல் போனவர்களை எங்களால் உறுதிப்படுத்த முடியவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கட்டிடம் இடிந்து விழுவதற்கு என்ன காரணம் என்று அதிகாரிகள் இன்னும் தீர்மானிக்கவில்லை, மியாமி-டேட் போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. மீட்புப் பணிகள் முழுமையடைந்த பின்னரே உயிரிழப்பு மற்றும் காயமடைந்தோர், சேதம் குறித்த சரியான தகவல் வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.

1981 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த கட்டிடம் 1990 களில் இருந்து ஆபத்தான கட்டிடமாக உள்ளது என 2020 ஆம் ஆண்டில் பூமி மற்றும் சுற்றுச்சூழல் துறையின் பேராசிரியரான ஷிமோன் வோடோவின்ஸ்கி நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பராகுவே ஜனாதிபதியின் உறவினர்கள் உள்பட பராகுவேவை சேர்ந்த 51 பேரை காணவில்லை.சோபியா லோபஸ் மோரேரா, அவரது கணவர் லூயிஸ் பெட்டன்கில் மற்றும் அவர்களது மூன்று இளம் குழந்தைகள் இன்னும் காணவில்லை என்று பராகுவே வெளியுறவு அமைச்சகம் வியாழக்கிழமை உறுதிப்படுத்தி உள்ளது.

அர்ஜென்டினாவின் பிரபல பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் ஆண்ட்ரஸ் கால்ப்ராஸ்கோனி, அவரது மனைவி மற்றும் புதிதாக தத்தெடுக்கப்பட்ட ஆறு வயது மகள் ஆகியோரையும் காணவில்லை.

Related posts