மரண அறிவித்தல் : அமரர். மனோகரன் கனகரத்தினம்

மரண அறிவித்தல்

மனோகரன் கனகரத்தினம்
பிறப்பு : 26.10.1951 இறப்பு : 23.06.2021

இலங்கை யாழ்ப்பாணம் நல்லூரை பிறப்பிடமாகவும் டென்மார்க் கேர்னிங் நகரை வதிவிடமாகவும் கொண்ட திரு. மனோகரன் கனகரத்தினம் அவர்கள் கடந்த 23.06.2021 புதன்கிழமை அதிகாலை 03.45 மணியளவில் டென்மார்க் கொல்ஸ்ரபோ வைத்தியசாலையில் மரணமடைந்தார்.

அன்னார் கனகரத்தினம் அன்னபூரணம் தம்பதியரின் மகனும் புஸ்ப்பராணி மனோகரனின் அன்புக்கணவரும், கந்தையா, காமாட்சி தம்பதியரின் மருமகனுமாவார்.

அன்னாருடைய சகோதரிகள் : பரமேஸ்வரி, வதனாவதி, ராஜேஸ்வரி

அன்னாருடைய சகோதர் : சுந்தரலிங்கம் அவர் மனைவி சாரதாதேவி சுந்தரலிங்கம்

மைத்துனர்கள் : வரதராசா, ஆனந்தராசா

பிள்ளைகள் : ஷங்கர் மனோகரன்
ஷஞ்ஜீவ் மனோகரன்
யாழினி ஈஸ்வர்

மருமகன் : ஈஸ்வர் ராஜாராம்

மருமகள்மார் : ஜமுனாதேவி, சந்தியா

பேரப்பிள்ளைகள் : கபிர்ஷான். திரன்பீர். ஆகாஷ். ஹிமாயா

அன்னாருடைய புகழ் உடலை இன்று கொல்ஸ்ரபோ கெப்பேலில். பி.ப. 15.00 முதல் 18.00 மணி வரை பார்வையிடலாம். முகவரி :
Viborgvej 10 – B
7500 Holstebro

( Skdestue விற்கு அருகாமையில் உள்ளது..)

இறுதிக்கிரியைகள் ஞாயிறு 10.00 – 13.00 மணிவரை கேர்னிங் கெப்பேலில் இடம் பெறும்..
முகவரி : Overgade 2, 7400 Herning

மேலதிக தொடர்புகளுக்கு மகன் சங்கர் மனோகரன் : தொலைபேசி இல் : 45 29887820

குறிப்பு : உங்கள் பாதுகாப்பிற்கு முகக் கவசம் அணிவது நல்லது..

Related posts