நடிகர் விஜய் பிறந்த நாள் பிரபலங்கள் வாழ்த்து

திடீர் என நடிகர் விஜய் வீட்டில் இருந்து வெளியில் வந்து தங்களைப் பார்க்க கோரிக்கை விடுத்து ரசிகர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் விஜய், இன்று தனது 47-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதையொட்டி அவர் தற்போது நடித்துவரும் ‘பீஸ்ட்’ படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் வெளியிடப்பட்டன. இந்த இரண்டு போஸ்டர்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததோடு, சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது.

இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் விஜய்க்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் சமூக வலைதளம் வாயிலாக வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் கமல்ஹாசன் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அன்பு தம்பிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

நடிகரும் திமுக எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். உதயநிதி ஸ்டாலின் தனது டுவிட்டில், வசீகரமான நடிப்பால் தமிழ் ரசிகர்களின் பேரன்பை பெற்றவர்; என்றும் அன்பு பாராட்டும் நல்ல நண்பர், எளிமையும் இளமையுமாய் திகழும் அண்ணன் தளபதி விஜய்க்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் என்று குறிப்பிட்டுள்ளார்.

நடிகையும், பிக்பாஸ் பிரபலமுமான கஸ்தூரி, பீஸ்ட் படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை பதிவிட்டு, ‘பிறந்தநாள் வருது, ஆனா வயசே ஆக மாட்டிங்குது’ எனக் குறிப்பிட்டு நடிகர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய்க்கு பிரந்த நாள் வாழ்த்து தெரிவிக்க அவரது வீட்டு முன் இன்று ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர்.அவர்கள் திடீர் என நடிகர் விஜய் வீட்டில் இருந்து வெளியில் வந்து தங்களைப் பார்க்க கோரிக்கை விடுத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.தர்ணாவில் ஈடுபட்ட விஜய் ரசிகர்களை போலீசார் அப்புறப்படுத்தினர்

Related posts