சிரேஷ்ட பதில் பொலிஸ் மாஅதிபராக அஜித் ரோஹண பதவி உயர்வு ?

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹணவுக்கு உடன் அமுலாகும் வகையில் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபராக பதவி உயர்வு வழங்க பொலிஸ் மாஅதிபர் சி.டி. விக்கிரமரத்ன உத்தரவிட்டுள்ளார்.
பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் அரச சேவை ஆணைக்குழு ஆகியவற்றிடமிருந்து கிடைக்கப்பெற்ற கடிதங்களின் பிரகாரம் இந்த பதவி உயர்வு தொடர்பான உத்தரவை மேற்கொண்டுள்ளார்.

——

எரிபொருள் விலை அதிகரித்துள்ள நிலையில் பஸ் உரிமையாளர்களுக்கு விஷேட சலுகைப் பொதியொன்றை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
எக்காரணத்திற்காகவும் பஸ் கட்டணங்களில் அதிகரிப்பு மேற்கொள்ளப்பட மாட்டாது என தெரிவித்துள்ள அவர், எரிபொருள் விலை அதிகரித்துள்ள நிலையில் பஸ் உரிமையாளர்கள் எதிர்நோக்கும் சிக்கல்களுக்கு தீர்வு காணும் வகையில் மேற்படி சலுகைப் பொதியை அறிமுகப்படுத்த தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அது தொடர்பில் இந்த வாரத்தில் பஸ் உரிமையாளர்களுடன் விசேட பேச்சுவார்த்தை ஒன்றை நடத்த தீர்மானித்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பஸ் கட்டணங்களில் திருத்தங்களை மேற்கொள்ளாமல் பயணிகள் போக்குவரத்துத் துறையை முன்னெடுத்துச் செல்வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளப் போவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

——

Related posts