‘பாபநாசம்-2’ படத்தில் கமல்ஹாசன் ஜோடி யார்?

‘திரிஷ்யம்’ படம் தமிழில், ‘பாபநாசம்’ ஆனது. கமல்ஹாசன், கவுதமி இருவரும் ஜோடியாக நடித்து இருந்தார்கள்.

மோகன்லால், மீனா ஜோடி நடித்த ‘திரிஷ்யம்’, ‘திரிஷ்யம்-2’ ஆகிய 2 மலையாள படங்களும் கேரளாவில் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றன. அதில் ‘திரிஷ்யம்’ படம் தமிழில், ‘பாபநாசம்’ ஆனது. கமல்ஹாசன், கவுதமி இருவரும் ஜோடியாக நடித்து இருந்தார்கள்.

அடுத்து ‘திரிஷ்யம்-2’ படமும் ‘பாபநாசம்-2’ என்ற பெயரில், ‘ரீமேக்’ ஆகிறது. இதில், கமல்ஹாசன் நடிக்க சம்மதம் தெரிவித்ததாக பேசப்படுகிறது. முதல் பாகத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்த கவுதமி, இரண்டாம் பாகத்தில் இல்லை என்றும், அவர் நடித்த கதாபாத்திரத்தில் மீனா நடிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

Related posts