சினிமா துறையில் பெண்கள் நிலையை கணிக்கும் தமன்னா

திரையுலகில் பெண்களுக்கு எதிரான போக்கு தொடர்ந்து இருக்கிறதா? என்ற கேள்விக்கு பதில் அளித்து தமன்னா கூறும்போது,

நடிகை தமன்னா சமூக விஷயங்களை வலைத்தளத்தில் பகிர்ந்து வருகிறார். டைரக்டர் சுராஜ் ஏற்கனவே, ‘நடிகைகள் அரைகுறை உடையில் கவர்ச்சியாக நடிப்பதைத்தான் ரசிகர்கள் விரும்புகிறார்கள். அதிக சம்பளம் பெறும் நடிகைகள் டைரக்டர் சொல்கிறபடி கவர்ச்சியாக நடிக்கத்தான் வேண்டும்” என்று பேசியது சர்ச்சையானது.

சுராஜை தமன்னா கண்டித்தார். தமன்னாவிடம் தற்போது அந்த சம்பவத்தை நினைவுபடுத்தி திரையுலகில் பெண்களுக்கு எதிரான போக்கு தொடர்ந்து இருக்கிறதா? என்ற கேள்வி எழுப்பட்டது.

அதற்கு பதில் அளித்து தமன்னா கூறும்போது, “பெண்களுக்கு எதிரான வெறுப்பும், பாரபட்சமும் எல்லா இடங்களிலும் இருக்கிறது. திரைத்துறையில் நடக்கும்போது பெரிதாகி விடுகிறது. முன்பு இயக்குனர் சுராஜ் அர்த்தம் புரியாமல் யதார்த்தமாக பேசி விட்டார். அந்த சமயத்தில் அவர் படத்தில் நான் நடித்துக்கொண்டு இருந்ததால் அச்சம் ஏற்பட்டது. அதுபோல பேசியவர்களின் தவறுகளை வெளிப்படுத்திய பிறகு மக்கள் மத்தியில் விழிப்புணர்வு வந்துள்ளது. அதுமாதிரி பேசுவது தவறு என்ற எண்ணம் ஏற்பட்டு உள்ளது. இத்தகைய மாற்றம் மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார்.

Related posts