எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் குறித்து விசாரணை

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் தொடர்பாடல் கட்டமைப்பை பகுப்பாய்வு செய்வதற்காக மற்றுமொரு குழுவை நியமிக்க அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களம் தீர்மானித்துள்ளது.
கணனி குற்றப்பிரிவு அதிகாரிகள் இந்த குழுவில் உள்ளடக்கப்படவுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதற்கிணங்க, கப்பல் தீப்பற்றிய சம்பவம் தொடர்பிலான விசாரணைகளுக்காக அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தில் இருந்து மாத்திரம் இரண்டு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
இதனிடையே, X-Press Pearl கப்பல் மூழ்கிக்கொண்டிருக்கும் கடற்பிராந்தியத்தில் இருந்து பெறப்பட்ட நீர் மாதிரி ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதனிடையே, கப்பலில் இருந்து கடலுக்கு எரிபொருள் கசிகின்றதா என்பதைக் கண்டறிவதற்காக நேற்று (07) சுழியோடிகள் ஆய்வில் ஈடுடவுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
——-
பாராளுமன்ற அமர்வில் இன்று கலந்து கொள்வதற்காக சிறைத்தண்டனை அனுபவித்து வரும் பாராளுமன்ற உறுப்பினர்களான ரிசாட் பதியுதீன் மற்றும் பிரேமலால் ஜயசேகர ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை பாராளுமன்ற அதிகார சட்டத்திற்கிணங்க சபாநாயகரால் வழங்கப்படும் உத்தரவுக்கு அமைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு மேற்படி இருவரையும் பாராளுமன்றத்திற்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு குற்றத்தடுப்பு விசாரணை திணைக்களத்தின் பணிப்பாளருக்கு பாராளுமன்றத்தின் சார்பில் நரேந்திர பெர்னாண்டோ கடிதம் மூலம் அறிவித்தல் விடுத்துள்ளார்.அவர்கள் இருவரும் தற்போது நாட்டில் நடைமுறையிலுள்ள சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றி பாராளுமன்றத்திற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படுமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts