சீன மொழியில் திரிஷ்யம் 2 ரீமேக்

தமிழிலும் கமல்ஹாசன், நடிக்க பாபநாசம் என்ற பெயரில் ரீமேக் ஆகி வரவேற்பை பெற்றது.

மோகன்லால், மீனா ஜோடியாக நடித்து மலையாளத்தில் 2013-ல் திரைக்கு வந்த திரிஷ்யம் படம் வசூல் சாதனை நிகழ்த்தி இந்திய திரையுலகையே திரும்பி பார்க்க வைத்தது. இந்த படம் தமிழிலும் கமல்ஹாசன், நடிக்க பாபநாசம் என்ற பெயரில் ரீமேக் ஆகி வரவேற்பை பெற்றது. தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது.

இதுபோல் சீன மொழியிலும் திரிஷ்யம் படத்தை ரீமேக் செய்து 2019-ல் வெளியிட்டனர். அங்கும் படம் வெற்றி பெற்றது. சமீபத்தில் மோகன்லால் மீனா நடிப்பில் திரிஷ்யம் 2-ம் பாகமும் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படமும் தெலுங்கு, இந்தி, கன்னட மொழிகளில் ரீமேக் ஆக உள்ளது. இதுபோல் திரிஷ்யம் 2-ம் பாகத்தை சீன மொழியிலும் ரீமேக் செய்ய உள்ளனர்.

திரிஷ்யம் முதல் பாகத்தில் சீன அரசின் சட்ட திட்டங்களுக்கு ஏற்ப கிளைமாக்ஸ் காட்சியை நாயகன் போலீசில் சரண் அடைவதுபோல் மாற்றி இருந்தனர். தற்போது 2-ம் பாகத்திலும் திரைக்கதையில் லேசான மாற்றம் செய்ய உள்ளனர். திரிஷ்யம் 2 சீன ரீமேக்கை சாம்குவாவே இயக்க உள்ளார்.

Related posts