மற்றுமொரு வறிய குடும்பத்திற்கு வீடு

முத்துஐயன்கட்டுகுளம், ஒட்டுச்சுட்டான் பகுதியில் கடந்த வியாழக்கிழமை (27) 64 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் மஞ்சுள கருணாரத்ன அவர்களின் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வொன்றின் போது,ஆர்.ராஜேஸ்வரி அவர்களின் குடும்பத்தின் நெருக்கடி நிலைமையை கருத்தில் கொண்டு அவருக்கான புதிய வீடொன்றுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது.

மேற்படி திட்டம் முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி உபாலி ராஜபக்ஷ அவர்களின் ஆசிர்வாதத்துடன் மேஜர் ஜெனரல் மஞ்சுள கருணாரத்னவின் வேண்டுகோளின் பேரில் கிடைக்கப்பெற்ற கொழும்பை சேர்ந்த நன்கொடையாளர் ஒருவரின் நிதி உதவியுடன் நிர்மாண பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

643 வது பிரிகேடின் தளபதி கேணல் டெரில் டி சில்வா அவர்களின் மேற்பார்வையில் 13 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையின் சிப்பாய்களால் கட்டுமானத்திற்கு அவசியமான மனித வள மற்றும் தொழில்நுட்ப உதவிகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் ஒடுசுட்டான் பிரதேச செயலாளர் திரு. டி. அகிலன், 643 பிரிகேட் தளபதி கேணல் டெரில் டி சில்வா, 13 இலங்கை தேசிய பாதுகாவலர் படையின் கட்டளை அதிகாரி மேஜர் ஜி.எஸ். எல் துஷார ஆகியோர் கலந்து கொண்டனர். வறிய குடும்பங்களுக்கான வீட்டு வசதிகளை பெற்றுக்கொடுக்கும் சிறப்பு வீட்டுவசதி திட்டம் சமூக திட்டமாக ஆரம்பிக்கப்பட்டு நாடு முழுவதிலுமுள்ள பாதுகாப்பு படைத் தலைமையகங்களின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Related posts