‘கடைசி விவசாயி’ விஜய் சேதுபதி படம் ஓ.டி.டி.யில் ரிலீஸ்

கொரோனா ஊரடங்கில் தியேட்டர்கள் மூடப்பட்டு உள்ளதால் திரைக்கு வர தயாராக இருந்த புதிய படங்களை ஓ.டி.டி.யில் வெளியிட்டு வருகிறார்கள்.

கொரோனா ஊரடங்கில் தியேட்டர்கள் மூடப்பட்டு உள்ளதால் திரைக்கு வர தயாராக இருந்த புதிய படங்களை ஓ.டி.டி.யில் வெளியிட்டு வருகிறார்கள். விஜய்சேதுபதி நடித்துள்ள கடைசி விவசாயி படம் பல மாதங்களுக்கு முன்பே முடிந்து கொரோனாவால் திரைக்கு வராமல் முடங்கி இருந்தது.

இந்த படம் தியேட்டரில் ரிலீசாகுமா? ஓ.டி.டி.யில் வருமா? என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இந்த நிலையில் கடைசி விவசாயி படத்தை ஓ.டி.டி.யில் வெளியிடுவது உறுதியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தை மணிகண்டன் இயக்கி உள்ளார். இவர் காக்கா முட்டை, குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை ஆகிய படங்களை இயக்கி பிரபலமானவர்.

கடைசி விவசாயி படத்தில் விஜய்சேதுபதி வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விவசாயத்தை காப்பாற்றுவதற்கான அவரது போராட்டமே கதை. ஏற்கனவே விஜய்சேதுபதி நடித்த க.பெ.ரணசிங்கம் படம் ஓ.டி.டி.யில் வெளியானது. மேலும் அவர் நடித்துள்ள துக்ளக் தர்பார், லாபம் படங்களையும் ஓ.டி.டி.யில் வெளியிட முயற்சிகள் நடப்பதாக கூறப்படுகிறது.

Related posts