சந்தைப்படுத்த முடியாத நிலையில் ஒரு இலட்சம் கிலோ பூசணி

ஒரு இலட்சம் கிலோ கிராம் பூசணிக்காயை சந்தைப்படுத்த முடியாத நிலையில், பூநகரி விவசாயிகள் -பெரும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 1 கிலோ பூசணிக்காயினை 20- –25 ரூபாய்க்கும் விற்க தாயாராக உள்ளதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

கிளிநொச்சி, பூநகரி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட முலங்காவில் பகுதி விவசாயிகளிடம் ஒரு இலட்சம் கிலோக்கிராம் பூசணிக்காய் இருப்பில் இருப்பதாகவும், கொரோனா நிலமை காரணமாக தம்புள்ளை சந்தை பூட்டப்பட்டுள்ளமையால் அதனை சந்தைப்படுத்த முடியாத நிலை காணப்படுவதுடன் அறுவடை செய்யப்பட்ட பூசணிக்காய்கள் பழுதடைவதாகவும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

இவ்விடயம் தொடர்பாக விவசாயிகள் தெரிவிக்கையில்,பல ஏக்கர் நிலத்தில் பல்வேறு சிரமத்தின் மத்தியில் சென்ற முறையும் விவசாயம் செய்து கொரோனாவால் பாதிப்படைந்தோம். இம்முறையும் பாரிய நட்டத்திற்கு முகம் கொடுத்துள்ளோம். இம்முறை நட்டம் ஏற்பட்டாலும் பரவாய் இல்லை ஒரு கிலோ பூசணிக்காயை 20 அல்லது 25 ரூபாய்காவது விற்க தயாராக உள்ளோம் என தெரிவித்தனர்.

Related posts