சமையல் நிகழ்ச்சித் தொகுப்பாளராக விஜய் சேதுபதி

சன் டிவியில் ஒளிபரப்பாகவுள்ள சமையல் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக பணிபுரியவுள்ளார் விஜய் சேதுபதி.
தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. தற்போது தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் சில படங்களில் நடித்து வருகிறார். எப்படி அனைத்து மொழிகளிலும் மாறி மாறி நடித்துக் கொண்டே இருக்கிறார் என்று பலரும் ஆச்சரியப்படுகிறார்கள்.
இந்நிலையில், தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகவுள்ள சமையல் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக பணிபுரியவுள்ளார் விஜய் சேதுபதி. இதற்கான ப்ரோமோவை வெளியிட்டுள்ளது சன் டிவி. வெளிநாட்டில் மிகவும் பிரபலமான ‘மாஸ்டர் செஃப்’ என்ற சமையல் நிகழ்ச்சியின் இந்தியாவில் அறிமுகம் செய்கிறார்கள்.
‘மாஸ்டர் செஃப் இந்தியா – தமிழ்’ என்ற பெயரில் இந்த நிகழ்ச்சி தயாராகியுள்ளது. விரைவில் சன் டிவியில் ஒளிபரப்பாகவுள்ள இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோவை வெளியிட்டுள்ளார்கள்.

Related posts