சமந்தா, படப்பிடிப்பில் கலந்து கொள்ள மறுப்பு

கொரோனா பயம் காரணமாக நடிகை சமந்தா ஒரு படப்பிடிப்பில் கலந்துகொள்ள மறுத்து விட்டார்.

சமந்தா தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழி படங்களிலும் கதாநாயகியாக நடித்து வருகிறார். நயன்தாராவுக்கு அடுத்த இடத்தில் அவர் இருந்து வருகிறார். ஒரு படத்துக்கு அவர் ரூ.3 கோடி சம்பளம் வாங்கி வருகிறார்.

இம்மாதம் ஒரு தெலுங்கு படத்தில் நடிப்பதற்கு அவர் ‘கால்சீட்’ கொடுத்து இருந்தார். அதன்படி, அந்த படத்தின் படப்பிடிப்பை ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடத்துவதற்கான ஏற்பாடுகளை தயாரிப்பாளர் செய்து வந்தார்.

இந்த நிலையில், சமந்தா அந்த படப்பிடிப்பில் கலந்து கொள்ள மறுத்து விட்டார். கொரோனா பயம் காரணமாக அவர் படப்பிடிப்பில் கலந்து கொள்ள மறுத்து இருக்கிறார். இதனால் அவர் நடிக்க இருந்த தெலுங்கு படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. அடுத்தகட்ட படப்பிடிப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளிப்போடப்பட்டு இருக்கிறது.

இதேபோல் சிரஞ்சீவி நடிக்க இருந்த ஒரு தெலுங்கு படப்பிடிப்பும் ரத்து செய்யப்பட்டுள்ளது. பிரபாஸ் நடிக்கும் ஒரு தெலுங்கு படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வந்தது. அந்த படப்பிடிப்பும் ரத்து செய்யப்பட்டு, தேதி குறிப்பிடாமல் தள்ளிப்போடப்பட்டுள்ளது.

Related posts