தேர்தல் தோல்வி: நடிகை குஷ்பு கருத்து

காங்கிரஸ் தலைவர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பா.ஜனதாவில் சேர்ந்தார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதா சார்பில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்துள்ளார். இது குஷ்புவின் ஆதரவாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் தேர்தல் முடிவு குறித்து டுவிட்டரில் குஷ்பு வெளியிட்டுள்ள பதிவில், “வெற்றி என்பது தோல்வியோடுதான் தொடங்குகிறது. மக்கள் தீர்ப்பை அடக்கத்தோடு ஏற்கிறேன். தொடர்ந்து மக்களுக்காக உழைப்பேன். அவர்களுடன் நிற்பேன். என் மீது நம்பிக்கை வைத்தவர்களுக்கு நன்றி. வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். அழகிய மாநிலமான தமிழ்நாட்டை மேலும் சிறப்பானதாக மாற்ற புதிய அரசுக்கு ஆதரவாகவும் உதவியாகவும் இருப்போம். அறிவாலயம் மீதும் அதன் தலைவர் மு.க.ஸ்டாலின் மீதும் எனக்கு நம்பிக்கை உள்ளது. அவரது தலைமையில் தமிழகம் முன்னேற்ற பாதைக்கு செல்லும் என்று நம்புகிறேன். தேர்தல்கள் வரும் போகும். நல்ல பணிகள் தொடர வேண்டும்” என்று கூறியுள்ளார்.
—–
பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத்தின் டுவிட்டர் கணக்கை நிரந்தரமாக முடக்கி டுவிட்டர் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. மேற்குவங்காளத்தில் தேர்தலுக்கு பின்பாக நடந்த வன்முறை தொடர்பாக கங்கனா ரணாவத்தின் பதிவுகள் சர்ச்சைக்குரிய வகையில் இருந்ததால், கணக்கு முடக்கப்பட்டதாக தெரிகிறது. வெறுக்கத்தக்க பதிவுகளை மீண்டும் மீண்டும் கங்கனா ராணாவத் வெளியிட்டதாகவும் டுவிட்டரின் விதிமுறைகளை மீறும் வகையில் கங்கனா ரணாவத்தின் பதிவுகள் இருந்ததால் கணக்கு முடக்கப்பட்டதாகவும் டுவிட்டர் விளக்கம் அளித்துள்ளது.
—–

Related posts