திமுக கூட்டணிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்; ஏ.ஆர் ரகுமான்

தமிழக சட்டமன்ற தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உள்ளது.

சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த மாதம் 6-ந் தேதி நடந்தது. நேற்று வாக்கு எண்ணிக்கை நடந்தது. இதில் பெரும்பான்மையான இடங்களில் திமுக வெற்றிபெற்று ஆட்சி அரியணையைக் கைப்பற்றியுள்ளது. முதல்வராக திமுக தலைவர் மு.க ஸ்டாலின் பதவியேற்க உள்ளார். தமிழகத்தில் 6-வது முறையாக ஆட்சி அமைக்க இருக்கும் திமுகவிற்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “ சமூக நீதி, கல்வி, சுகாதாரம் ஆகியவற்றில் தமிழ்நாடு வரலாறு காணாத வளர்ச்சியடைய, இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு ஒரு எடுத்தக்காட்டாய் திகழ, திமுக கூட்டணிக்கு என் வாழ்த்துக்கள்” எனப்பதிவிட்டுள்ளார்.

Related posts