தடுப்பூசிகள் தேவைப்படும் நேரத்தில் இராணுவ தளபாட கொள்முதல் ஏன்?

கொரோனா தடுப்பூசிகள் 440மில்லியன் டோஸ் தேவைப்படும் இத்தருணத்தில் ஹெலிகொப்டர்களைக் கொள்வனவு செய்ய பில்லியன்கள் செலவிடப்படுகிறது. தேசிய பாதுகாப்பு வலுப்படுத்தப்பட வேண்டும் ஆனால் முதலில் கொவிட்19தடுப்பூசிகள்தான் எமக்கு தேவையென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்றுமுன்தினம் நொச்சியாகம, ஹொருவில ஸ்ரீ தபோதனாராம ரஜமஹா விகாரைக்குச் சென்று மகா சங்கத்தின் ஆசீர்வாதங்களைப் பெற்று, பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

720மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் ரஷ்யாவிலிருந்து நான்கு ஹெலிகப்டர்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. நாட்டின் தேசிய பாதுகாப்பு பாதுகாக்கப்பட வேண்டும்தான்.

ஆனால் இந்த முக்கியமான நேரத்தில் தேசிய பாதுகாப்பு என்ற போர்வையில் ஹெலிக்கப்டர்கள் மற்றும் இராணுவ வாகனங்களை அவசரமாக கொள்வனவு செய்யும் அரசாங்கத்தின் நோக்கம் என்ன? கொவிட் தடுப்பூசிகளே எமக்கு முதலில் தேவைப்படுகின்றன என்றும் அவர் கூறியுள்ளார்.

Related posts